Friday, November 13, 2009

இரண்டு தசாப்தங்களை நிறைவு செய்யும் சச்சினின் சாதனை பயணம்

இன்றுடன் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து 20 வருடங்கள் நிறைவு பெறுகின்றது.இருபது ஆண்டுகளாக கிறிக்கெட்டில் ஆற்றிய சேவைக்கும் சாதனைகளுக்கும் பாராட்டுக்கள்.




விருதுகள்
  •      விஸ்டன் சஞ்சிகையால் இதுவரை கிரிக்கெட் விளையாடிய  சிறந்த   ஒருநாள் மற்றும் டெஸ்ட்  துடுப்பாட்டவீரர்களுக்கான தரப்படுத்தலில் இரண்டாம் இடம்   .
  • இந்தியாவில் இரண்டாவது உயரிய குடிமுறை விருதான பத்ம விபூஷண் விருது
  •  இந்தியாவில் விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் இவர் பெற்றுள்ளார்.

ஒருநாள் போட்டிகளின் சாதனைகள்
  •  தன்னுடைய வயதை விட அதிக சதங்களை அடித்த ஒரே ஒரு கிரிக்கெட் வீரர்
  • அதிகமான சிறப்பாட்டக்காரர் விருது பெற்ற வீரர்
  • அதிக மைதானங்களில் விளையாடிய வீரர்
  • அதிக ஓட்டங்கள்
  • அதிக சதங்கள்
  • அதிகமான தடவை ஐம்பது ஓட்டங்களுக்கு மேல் பெற்ற வீரர்
  • பத்தாயிரம் ஓட்டங்களுக்குமேல் பெற்ற வீரர்களில் சிறந்த சராசரியுடைய வீரர்.
  •  
டெஸ்ட்  போட்டிகளின் சாதனைகள்

  • அதிக சதங்கள் .
  • அதிக மைதானங்களில் விளையாடிய வீரர்.
  • டெஸ்ட் போட்டிகளில் குறைந்த இனிங்சில் பத்தாயிரம் ஓட்டங்களை பெற்ற வீரர்
  • பத்தாயிரம் ஓட்டங்களை பெற்ற வீரர்களில் சிறந்த சராசரியுடைய வீரர்.
  •  





    சச்சின் டெண்டுல்கருக்கு சர்வதேச கிறிக்கெட் போட்டிகளில் 30 ஆயிரம் ஓட்டங்களை பெற்ற ஒரே ஒரு வீரர் என்ற சாதனையை நிலைநாட்ட இன்னும் 39ஓட்டங்களே தேவைப்படுகின்றன.

    சச்சின் டெண்டுல்கர் சதம் பெறும் போட்டிகளில் இந்திய அணி தோற்பது எழுதி வைக்கப்படாத மரபாக மாறியிருப்பதாக சில ஊடகங்கள் விமர்சிக்கின்றன.  ஆனால் அவர் சதம் பெற்ற 45  ஒருநாள் போட்டிகளில்  13 இல் மாத்திரமே இந்திய அணி தோல்வியுற்றிருக்கின்றது.

    2000 ஆம் ஆண்டிலிருந்து கூட அவர் பெற்ற  21 சதங்களில்  9 சதங்கள் மட்டுமே  இந்திய அணி தோல்வியுற்ற போட்டிகளில் பெறப்பட்டவை.
    இறுதிப்போட்டிகளில் பெற்றுக்கொண்ட சதங்கள் ஐந்து.அனைத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

    சச்சின் டெண்டுல்கர் ஒரு மட்ச் வின்னர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


    இன்னும் பல ஆண்டுகள் இவரின் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்.







      12 comments:

      Unknown said...

      //சச்சின் டெண்டுல்கர் சதம் பெறும் போட்டிகளில் இந்திய அணி தோற்பது எழுதி வைக்கப்படாத மரபாக மாறியிருப்பதாக சில ஊடகங்கள் விமர்சிக்கின்றன. ஆனால் அவர் சதம் பெற்ற 45 ஒருநாள் போட்டிகளில் 13 இல் மாத்திரமே இந்திய அணி தோல்வியுற்றிருக்கின்றது.//

      நீங்கள் சொல்வது சரிதான்..
      ஆனால் அப்படித் தோற்றாலும் அது சச்சினின் பிழையில்லையே?

      உலகத்தில் தோன்றிய மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் சச்சினும் ஒருவர்...

      இவ்வளவு சாதனைகளுக்கப் பிறகும் அந்த அடக்கம் தான் சச்சினை இவ்வளவுக்கு உயர்த்தியிருக்கிறது...

      என்றும் அன்புடன் உங்கள் விமல் said...
      This comment has been removed by a blog administrator.
      maruthamooran said...

      சச்சின்: விமர்சனங்களுக்கும், கேலிகளுக்கும் துடுப்பினால் பதில் சொல்கிற கிரிக்கட் வீரர். வேறு என்னத்தைச் சொல்ல. வாழ்த்துக்கள் சஞ்சீவன் தங்களின் பதிவுலக பயணத்துக்கு.

      (சிறிய தகவல்: பள்ளிக் காலங்களில் இலங்கை அணிக்கே என்னுடைய ஓரளவு ஆதரவு இருக்கும். ஆனால், இந்தியாவுக்கு எதிராக விளையாடினால், சச்சின் சதம் அடிக்கவேண்டும் என்று மனது ஏங்கும். )

      ARV Loshan said...

      நல்ல ஒரு தொகுப்பு.. இன்று அவதாரம் நிகழ்ச்சியில் சச்சின் பற்றிய ஒரு தொகுப்பு இடம்பெறுகிறது..
      பிறகு என்னுடைய பதிவும் வரும்.. :)

      Admin said...

      நல்ல பகிர்வு. பகிர்வுக்கு நன்றிகள்

      கார்த்தி said...

      நல்ல பதிவு. தொடருங்கள்!!!

      sanjeevan said...

      ///நீங்கள் சொல்வது சரிதான்..
      ஆனால் அப்படித் தோற்றாலும் அது சச்சினின் பிழையில்லையே?///
      ஒத்துக்கொள்கிறேன் இறுதியாக நடந்த போட்டி நல்ல உதாரணம்
      வருகைக்கு நன்றி நண்பா

      sanjeevan said...

      தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி மருதமூரான் அண்ணா :)

      sanjeevan said...

      நன்றி லோசன் அண்ணா :)
      உங்களுடைய பதிவையும் வாசித்தேன்

      sanjeevan said...

      நன்றி சந்துறு அண்ணா :)

      sanjeevan said...

      நன்றி கார்த்தி அண்ணா :)

      Anonymous said...

      நாடுகடந்த தமிழீழ அரசிற்கமைய, தமிழர்கள் உலகில் பல பாகங்களில் பிரிந்து இருந்தாலும், இவர்கள் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் கிறிக்கெட் விளையாட்டு பயிற்சிகளை வழங்கி, சிறந்த கிறிக்கெட் வீரர்களை தேர்ந்தெடுத்து, நாடுகடந்த தமிழீழ அரசின் கிறிக்கெட் விளையாட்டு குழு ஒன்றை தோற்றுவிக்க வேண்டும். அக்குழு அனைத்துலக கிறிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான அனுமதியைப் பெற்று, ஒரு நாட்டுக்கான அங்கீகாரத்துடன் போட்டிகளில் பங்குக்கொள்ளும் நிலையை உருவாக்கப்பட வேண்டும்.

      இவ்வாறான செயல்பாடுகளும் உலகின் தமிழரின் ஒருங்கிணைந்த விடுதலையுணர்வையும், தமிழீழ மீட்பையும் வெளியுலகுக்கு வெளிக்காட்டும் செயல்பாடுகளாக அமையும்; அன்னிய நாடுகளின் தமிழீழ ஆதரவைப் பெறவும் வழி வகுக்கலாம்.

      அதற்கான ஆதரவுகளை அனைத்து உலகத் தமிழினம் வழங்க வேண்டும்.

      நன்றி!

      அன்புடன்
      உங்களில் ஒருவன்

      Post a Comment

      இந்த கிறுக்கல் பற்றிய உங்கள் கருத்துக்களால் என் பேனாவை மீள் நிரப்புங்கள்.