Sunday, October 25, 2009

இலங்கை வலைப்பதிவாளர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்துவரும் இருக்கிறம் சஞ்சிகைக்கு பலகோடி நன்றிகள்.

இலங்கை வலைப்பதிவாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இருக்கிறம் சஞ்சிகையினால் நடாத்தப்படுகின்றதன் மூலம் நமக்கெல்லாம் மீண்டுமொருமுறை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

இடம் : இருக்கிறம் அலுவலகம்
இல 3, டொரிங்டன் அவெனியூ
கொழும்பு 7.

காலம் : நவம்பர் மாதம் 2 ஆம் திகதி
மாலை 3 மணி


வருகை தர விரும்புபவர்கள் எதிர்வரும் புதன் கிழமைக்கு முன்னர் தங்களின்
வருகையை பின்வருமாறு உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்த : irukiram@gmail.com
தொலைபேசிமூலம் உறுதிப்படுத்த : 0113150836
22 comments:

கனககோபி said...

வருவீர்களா???

Subankan said...

நீங்களும் வருவீங்களா? அங்கே சந்திக்கலாம்.

தங்க முகுந்தன் said...

நாம் பங்குபற்ற முடியா விட்டாலும் செய்திகளுக்காக காத்திருக்கிறோம்! வாழ்த்துக்கள்!

sanjeevan said...

நிச்சயமாக...........
நீங்க வாறீங்க தானே கனகோபி,சுபாங்கன்

sanjeevan said...

நன்றி முகுந்தன்.

கனககோபி said...

I'm coming.... coming... coming...
(this means I want 3 chairs to manage myself)

sanjeevan said...

அப்ப சந்திப்பம் கனகோபி..

பிரபா said...

சிறப்பாக நடந்தேறட்டும்.... வாழ்த்துக்கள்

Subankan said...

நாங்க வராம?

sanjeevan said...

அப்பிடீன்னா நீங்க வரமாட்டீங்களா பிரபா....

கஜந்தன் said...

நாங்களும் வரட்டுமா சஞ்சீவன்????

ஆன்தர்சிகா said...

சஞ்சீவ் அண்ணா........
வடையோடை வேறென்ன தருவாங்கள்????

எனக்கு 2 வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

sanjeevan said...

வாங்க கஜந்தன் வந்து பழகுங்க.
ஆன் தர்சிகா நீங்க எதிர்பார்பார்க்கிற எல்லாம் இருக்கு.

சந்ரு said...

சந்திப்போம்

sanjeevan said...

நீங்களும் வாறீங்களா சந்துறூ அண்ணா...
சந்திப்போம்.

செந்தா said...

நாங்கள் வந்தம் , ஆனா அலுப்பு தாங்கமுடியலையே சஞ்சீவன் அண்ணா,

வந்த பஸ் காசுக்கு வடை காணாது

ஏமாத்திட்டீங்களே...............

லோசன் said...

வந்த எல்லோரையும் இருக்கிறம் சஞ்சிகையின் நிருபர்களாக நினைத்து கதைத்தார்களாம் என்று சிலர் கடுப்பாகிறார்களே! உங்கள் பதில் என்ன சஞ்சீவன்?

LOSHAN said...

அடப் பாவிகளா. இங்கேயும் போலியா? ;)

பயன்படுத்த வேறு பெயர் கிடைக்கவில்லையா?
வந்தோம்.. சென்றோம்..
இது 'இருக்கிறம்' சந்திப்பு தானே?
நாம் சந்தித்தோம்.

sanjeevan said...

///வந்த எல்லோரையும் இருக்கிறம் சஞ்சிகையின் நிருபர்களாக நினைத்து கதைத்தார்களாம் என்று சிலர் கடுப்பாகிறார்களே///
சொந்த பெயரில வாங்க சார்.

VENU said...

sanjeevan என்ன மரியாதை எல்லாம் குடுத்து பேசுறீங்க... அங்க அப்படி கட்டுப்பாடா???

sanjeevan said...

VENU said...
///sanjeevan என்ன மரியாதை எல்லாம் குடுத்து பேசுறீங்க... அங்க அப்படி கட்டுப்பாடா???///

யாருடன் பேசுகிறோம் என்று தெரியாமல் பேசும் போது
மரியாதை கொடுப்பது தானே முறை

பச்சிளம் பாலகன் said...

இருக்கிறம் சஞ்சிகையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் வலைப்பதிவர் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது.

3 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இயற்கையில் மாற்றத்தினால் 4 மணி பிந்தியே சந்திப்பு ஆரம்பிக்கப்பட்டது.

எனினும், நாங்கள் குறித்த நேரத்திற்கு சென்று நண்பர்களுடன் கலந்துரையாட ஆரம்பித்து விட்டோம். சுமார் 50ற்கும் மேற்பட்டோர்.

சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், அறிவிப்பாளர்கள், வலைப்பதிவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட மேலும் பல கலந்து கொண்டதை காணக்கூடியதாய் இருந்தது.

இது வலைப்பதிவுகளை பற்றிய சந்திப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் சென்ற எமக்கு ஏமாற்றம்………

இருக்கிறம் சஞ்சிகையை பற்றிய ஒரு கலந்துரையாடல். ஏன்? இருக்கிறம் சஞ்சிகையின் ஊடகவியலாளர் மாநாடு என்று தான் கூற வேண்டும்.

எத்தனை பேர் வெளி மாகாணங்களிலிருந்து வந்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் ஏமாற்றம் தான்.

மட்டக்களப்பு, வவுனியா, பதுளை உள்ளிட்ட மேலும் பல இடங்களிலிருந்து கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பு ஊடகவியலாளர்களான எமக்கு பயனை அளித்த போதிலும், அவர்களுக்கு அது பயனலிக்கவில்லை என்றே கூற வேண்டும்.

இருக்கிறம் சஞ்சிகையினால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த சந்திப்பு சிறந்தது என்றாலும், அழைப்பு தான் பிழையாயிற்று.

இது ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் என்று அழைப்பை விடுத்திருந்தால் பயனலித்திருக்கும். இருக்கிறம் ஏற்பாட்டாளர்கள் வலைப்பதிவுகளில் அழைப்பை விடுத்ததனால் இது வலைப்பதிவர் சந்திப்பு என்று அனைவரால் பேசப்பட்டது.

அதனால் தான் அனைத்து வலைப்பதிவர்களும் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.

இனிவரும் காலங்களில் இவ்வாறான சந்திப்புக்களை ஏற்பாடு செய்யும் போது உரியவர்களை மாத்திரம் அழையுங்கள்.

இது எனது கருத்து மாத்திரம் இல்லை. சந்திப்பிற்கு வருகை தந்த சிலரின் கருத்தை தொகுத்த கருத்துக்கள்!

புதிய முகங்கள் பலரை நேற்றைய தினம் நான் சந்தித்தேன்.
அதற்காக இருக்கிறம் சஞ்சிகைக்கு எனது நன்றிகள்.

Post a Comment

இந்த கிறுக்கல் பற்றிய உங்கள் கருத்துக்களால் என் பேனாவை மீள் நிரப்புங்கள்.