இலங்கையில் பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கிடையில் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் அணிக்கு ஆறு பேர் விளையாடும் ஐந்து ஓவர் கடினப்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் இந்த வருடம் முதல் முறையாக வடக்கு கிழக்கிலிருந்து பாடசாலைஅணிகள் பங்கு பற்றியிருந்தன. இதில் பங்கு பற்றிய யாழ்ப்பாணம் கல்லூரிகள் அணி காலிறுதிவரை முன்னேறி முன்னணி கொழும்பின் பிரபல கல்லூரிகளுக்கு அதிர்ச்சியளித்தது.

யாழ் மாவட்ட பாடசாலைகள் அணி
கொழும்பு, கெம்பல் பார்க் மைதானத்தில் நேற்று முடிவடைந்த அணிக்கு 5 ஓவர்களைக் கொண்ட இந்த போட்டி தொடரில் தேசிய அளவில் 25 பாடசாலைகள் பங்குபற்றின. இதில் எவரும் எதிர்பார்க்காதவகையில் தனது முதல் போட்டியில் லைசியம் கல்லூரியை 3 விக்கெட்டுகளால் வீழ்த்திய யாழ்ப்பாணம் கல்லூரிகள் அணி இரண்டாவது போட்டியில் மிகவும் பலமான கொழும்பு சென் தோமஸ் கல்லூரியை 4 விக்கெட்டுகளால் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது.
எனினும் நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் கொழும்பு ரிச்மன்ட் கல்லூரியை சந்தித்த யாழ்ப்பாணம் கல்லூரிகள் அணி மிகவும் துரதிஸ்டவசமாக 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் பங்கேற்ற ரோயல் கல்லூரி, ஆனந்தா கல்லூரி, நாலாந்தா கல்லூரி ஆகிய முன்னணி பாடசாலைகள் ஆரம்ப சுற்றிலேயே தோல்வியடைந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து முதல் முறையாக தேசிய மட்ட கிறிக்கெட் தொடரொன்றில் பங்கேற்ற யாழ் மாவட்ட கல்லூரிகள் அணி காலிறுதிவரை முன்னேறியது இலங்கை கிரிக்கெட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அணியில் விளையாடிய அனைவருக்கும் எதிர் காலத்தில் மேலும் சிறப்பாக விளையாடி தேசிய அணியில் இடம்பிடித்து நம் மண்ணின் பெருமையை உலகுக்கு காட்ட வேண்டுமன வாழ்த்துகிறேன்.
11 comments:
yaalppaanam enral summaavaa
உண்மையில் சிறப்பான ஒரு பதிவை (பணியை) செய்துள்ளீர்கள் நண்பரே. எமது காலத்திலும் 89-97 பல அசாத்திய திறமைகள் கொண்ட யாழ்ப்பாண கிரிக்கட் வீரர்கள் இருந்தனர். அனால் அவர்களின் திறமைகள் அத்தனையும் நாட்டு நிலைமைகளால் வீண்போனது. இனிவரும் இளைஞர்களாவது யாழ்மண்ணில் இருந்து தேசிய மட்டத்திற்கு சென்று முத்திரை பொறிக்கட்டும். முதல் முதல் ஆசிய விளையாட்டுப்போட்டியில் உயரம் பாய்தலில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் பெற்று கொடுத்தவர் ஒரு யாழ்ப்பாணத்தவரே..(எதிர்வீரசிங்கம்) இந்த நிலைகள் யாழ்ப்பாண மண்ணின் மைந்தர்களுக்கு இன்று திறமைகள் இருந்தாலும் சந்தர்ப்பங்கள் வழங்கப்படுமா என்பது சந்தேகமே! என்றாலும் அவர்கள் சாதிக்கவேண்டும் என பிரார்த்திப்போம்.
அருமையான பதிவு சஞ்சி,
வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கோ. உம்மிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறோம்.
திறமையுள்ளவர்களுக்கு தேசிய அணியில் இடம் கொடுக்கப்பட்டால் நிச்சயம் யாழ் வீரர்களும் திறமையை வெளிக்காட்டுவார்கள்.
நல்ல ஒரு பதிவு.. இப்படியான விஷயத்தையும் நாம் வெளிப்படுத்தவேண்டும்..
அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.. தொடர்ந்து பிரகாசிப்பார்கள் என நம்பலாம்..
மட்டக்களப்பு, திருகோணமலை,அம்பாறை மாவட்ட அணிகளும் வந்திருந்தன. ஆனால் அவை முதல் சுற்றிலேயே தோற்றுவிட்டன..
தொடர்ந்து தேடிஎடுத்து பதிவிடுங்கள்.. வாழ்த்துக்கள் சகோ..
நன்றி jana அண்ணா..
பொறுத்திருந்து பார்ப்போம்..
அடுத்த மாகாண மட்ட T20 போட்டிகளில் வென்றால் சம்பியன்ஸ் லீக் வரைக்கும் செல்லலாம்.
நன்றி தனஞ்சி(பால்குடி) அண்ணா.
நன்றி லோசன் அண்ணா.
வரவேற்கதக்க விடயம் என்னும் முன்னேறி தேசிய அணியில் இடம்பிடிக்க வாழ்த்துக்கள்
நன்றி மணி..
எல்லாம் சரி ஆனால் தமிழில் கூடிய கவனம் செலுத்தவும்..
உங்களின் கருத்துக்கு நன்றி கஜந்தன் ஏதோ என்னால முடிஞ்சதை பண்ணுறன் அவ்வளவு தான். உங்களின் தமிழ்ப்பற்று என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.
Post a Comment
இந்த கிறுக்கல் பற்றிய உங்கள் கருத்துக்களால் என் பேனாவை மீள் நிரப்புங்கள்.