இலங்கை வலைப்பதிவாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இருக்கிறம் சஞ்சிகையினால் நடாத்தப்படுகின்றதன் மூலம் நமக்கெல்லாம் மீண்டுமொருமுறை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
இடம் : இருக்கிறம் அலுவலகம் இல 3, டொரிங்டன் அவெனியூ
கொழும்பு 7.
காலம் : நவம்பர் மாதம் 2 ஆம் திகதி
மாலை 3 மணி
வருகை தர விரும்புபவர்கள் எதிர்வரும் புதன் கிழமைக்கு முன்னர் தங்களின் வருகையை பின்வருமாறு உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்த : irukiram@gmail.com தொலைபேசிமூலம் உறுதிப்படுத்த : 0113150836
உலகின் அதிவேக மனிதர் என வர்ணிக்கப்படும் யுசைன் போல்ட் மேற்கிந்திய தீவுகளில் நேற்று நடைபெற்ற கண்காட்சி கிறிக்கெட் போட்டியொன்றில் விளையாடினார். எதிரணி வீரரான கிறிஸ் கெயிலுக்கு இவர் முதல் பந்தாக பவுண்சர் பந்தை வீச அதை அவர் சிக்சராக விளாசினார். இரண்டாவது பந்தாக மிகவும் சிறந்த பந்து வீச்சை வீசி கெயிலை போல்ட் செய்து அனைவரையும் பரவசப்படுத்தினார் .
துடுப்பெடுத்தாடும் காட்சிகள்
துடுப்பாட்டத்திலும் பவுண்டரி,சிக்சர்களை விளாசி 23 ஓட்டங்களை குவித்தார்.
எதிரணியில் மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் கிறிக்கெட் நட்சத்திரங்களான Walsh, Richie Richardson, Curtley Ambrose ஆகியோரும் தற்போதைய நட்சத்திரங்களான Gayle, Ramnaresh Sarwan, Jerome Taylor ஆகியோரும் விளையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது கருத்து தெரிவித்த போல்ட் தான் சிறு வயதிலிருந்து வேகப்பந்து வீச்சாளராக வரவே ஆசைப்பட்டதாகவும் தனது தனிப்பட்ட பயிற்சியாளரே தன்னை தடகள வீரராக மாற்றியதாகவும் குறிப்பிட்டார்.
இப்போது IPL அணிகளின் உரிமையாளர்களின் பார்வை போல்ட் பக்கம் திரும்பியிருக்கிறதாம்.
இலங்கையில் பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கிடையில் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் அணிக்கு ஆறு பேர் விளையாடும் ஐந்து ஓவர் கடினப்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் இந்த வருடம் முதல் முறையாக வடக்கு கிழக்கிலிருந்து பாடசாலைஅணிகள் பங்கு பற்றியிருந்தன. இதில் பங்கு பற்றிய யாழ்ப்பாணம் கல்லூரிகள் அணி காலிறுதிவரை முன்னேறி முன்னணி கொழும்பின் பிரபல கல்லூரிகளுக்கு அதிர்ச்சியளித்தது.
யாழ் மாவட்ட பாடசாலைகள் அணி
கொழும்பு, கெம்பல் பார்க் மைதானத்தில் நேற்று முடிவடைந்த அணிக்கு 5 ஓவர்களைக் கொண்ட இந்த போட்டி தொடரில் தேசிய அளவில் 25 பாடசாலைகள் பங்குபற்றின. இதில் எவரும் எதிர்பார்க்காதவகையில் தனது முதல் போட்டியில் லைசியம் கல்லூரியை 3 விக்கெட்டுகளால் வீழ்த்திய யாழ்ப்பாணம் கல்லூரிகள் அணி இரண்டாவது போட்டியில் மிகவும் பலமான கொழும்பு சென் தோமஸ் கல்லூரியை 4 விக்கெட்டுகளால் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது.
எனினும் நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் கொழும்பு ரிச்மன்ட் கல்லூரியை சந்தித்த யாழ்ப்பாணம் கல்லூரிகள் அணி மிகவும் துரதிஸ்டவசமாக 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்த போட்டியில் பங்கேற்ற ரோயல் கல்லூரி, ஆனந்தா கல்லூரி, நாலாந்தா கல்லூரி ஆகிய முன்னணி பாடசாலைகள் ஆரம்ப சுற்றிலேயே தோல்வியடைந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து முதல் முறையாக தேசிய மட்ட கிறிக்கெட் தொடரொன்றில் பங்கேற்ற யாழ் மாவட்ட கல்லூரிகள் அணி காலிறுதிவரை முன்னேறியது இலங்கை கிரிக்கெட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அணியில் விளையாடிய அனைவருக்கும் எதிர் காலத்தில் மேலும் சிறப்பாக விளையாடி தேசிய அணியில் இடம்பிடித்து நம் மண்ணின் பெருமையை உலகுக்கு காட்ட வேண்டுமன வாழ்த்துகிறேன்.
பொன்னியின் செல்வன் - ஒலி நூல்
-
பொன்னியின் செல்வன் - என் பால்ய வயதுக் கனவு அது. என் கனவுகளில் எனக்கு double
acting.வந்தியத்தேவனும் நானே; அருண்மொழிவர்மனும் நானே..திரைப்படமாக
வந்தால்..அப்பட...
அச்சம்
-
அச்சம் அறுத்தெறிந்து
மிச்சம் அழித்தொழித்து
துச்சம் என விரைந்து
தூற முயலும் ஒரு மேகம்
என்னதான் முயன்றாலும்
முடிவில் மிஞ்சும் சிறு எச்சம்
அச்சத்தை மிச...
மீண்டும் தூசுதட்டப்படுகிறது
-
நீண்ட நாட்களின் பின்னர் இந்திய நண்பர் ஒருவர் இன்று என்னுடன் பேசினார்.
முன்னர்போல் ஏன் எழுதுவதில்லை என்று கேட்டார் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர்
நான் எழுதி...
அஞ்சாமாண்டு பெறுபேறும் விளைவுகளும்
-
எனக்கு இன்னமும் விளங்காமல் இருக்கிறதுகளில ஒண்டு எங்கட சனம் ஏனுந்த அஞ்சாம்
ஆண்டு புலமைப் பரிசில் சோதினைக்கு இவ்வளவு முக்கியத்துவம் குடுக்குறாங்கள்
எண்டதுதா...
போலிப் பதிவர் சந்திப்பு...
-
தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது '
*இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த
பதிவர்கள் சிலர...